Thursday, March 5, 2009

திண்ணை - திருமணம்

திண்ணைல இன்னிக்கி எல்லோரும் சரியான நேரத்திக்கு ஆஜர். செட்டியார் நேத்து போட்ட போடுல மாடசாமி, சீனி, தெருப்புழுதி மூவரும் கதி கலங்கி போயினர்.. "செட்டியாரே என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?" தெருப்புழுதி சும்மா சீண்டினான்.. "அதெல்லாம் ஒன்னும் இல்லடா ,..வீட்ல கொஞ்சம் பிரச்சனை...அதான்.." "வீட்டம்மா கூட ஏதும் மனஸ்தாபமா?" சீனி கிண்டினான்.
"ஆமாடா, ரெண்டு நாளா அவ மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்கா..சாப்பாட்டு தட்ட வைக்கும் போது கூட 'தங்கு தங்கு'னு தான் வைக்கா.. முகம் கொடுத்து கூட பேச மாடிக்கா.. என்ட்ட ஏதாவது சொல்லனும்னா கூட பக்கத்தூட்டு பார்வதிட்ட சொல்றமாதிரி சொல்றா.. இரவு தூங்கும்போது கூட கட்டில்ல படுக்காம தனியா கீழ படுத்துகுறா... அவளுக்கு ஏதோ மனசுல உறுத்தல் இருக்குன்னு தோணுதுடா..". "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல செட்டியாரே..இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..நேரடியா பேச மாட்டாங்க...இப்படி என்னத்தையாவது மனசுல நினைச்சிட்டு மூஞ்சிய தூக்கி வச்சிப்பாங்க" சீனி ஏதோ கல்யாணம் ஆகி நாலு பிள்ள பெத்த மாதிரி வ்யாக்யானம் பேசினான்.
"அடேய் சீனி, கல்யாணங்கறது அந்த காலத்துல விவாகம்னு சொல்லுவாங்க. ஒரு ஆணும் பெண்ணும் மனசால ஒன்னு சேருறது தான் விவாகம். இது இந்த ஜென்மம் மட்டுமில்ல ஏழு ஜென்மத்துக்கும் அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து இருபாங்கங்க்றது தான் இந்துத்வா நியதி. இதில்ல ஒரு ஜென்மத்துல ஆண் பெண்ணாவும் , பெண் ஆன்னாவும் பிறப்பதுண்டு. இதுல்ல சில விதிவிலக்கு உண்டு. ஒவ்வரு மனுஷாளுக்கும் நாலு வாழ்க்கை முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. அது ப்ரம்மசார்யா, கிரகாச்தா, வனபுராச்தா, சந்நியாச்தா.. இதுல்ல கிரகாச்தா தேர்ந்தெடுத்தா தான் விவாகம். கிரகாச்தா மூலமா தான் இந்த பிறவில நம்ம தர்மா, அர்ர்த்தா, காமா மற்றும் மொக்ஷா அடைய முடியும்... இதெல்லாம் அந்த காலத்துல்ல கல்யாணம் பன்னனுங்க்ரதுக்காக சொல்லுவாங்க. எந்த ஒரு உயிரினத்திற்கும் முதல் விதியே, தன்னோட விருக்ஷத்த இந்த பூமியில பரப்பனும்ங்க்றது தான். அதற்காக தான் நாம விவாகம்னு ஒரு வட்டத்துக்குள்ள சில நெறிமுறைகள் பின்பற்றி நம்ம விருக்ஷத்த பெருகுறோம். இதுல கணவனும் மனைவியும் அன்பா, பாசமா, ஒருத்தர்கொருத்தர் விட்டுகொடுத்து, மகிழ்வித்து, வாழ்ந்து வந்தா இந்த ஜென்மம் மட்டுமில்ல ஏழு ஜென்மமும் பூர்வ ஜென்மமா முடியும்! " - செட்டியார் கல்யாணத்துக்கு ஒரு அர்த்தமே கொடுத்தார்.
தெருப்புழுதிக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தாலும் பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தான். "அது சரி செட்டியாரே, உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு நாலு வருஷம் இருக்குமா?" தெருப்புழுதி கேட்டான். " அடேய், நேத்தோட எனக்கு எட்டு வருஷாச்சுடா!" - செட்டியார் பெருமை பட்டு கொண்டார். "ஆமா செட்டியாரே, நீங்க தான் ஒவ்வரு கல்யாண நாளுக்கும் அக்காவ கூட்டிட்டு அம்மங்கோவிலுக்கு போயிட்டு அப்படியே மொத ஆட்டம் படம் பாத்துப்புட்டு வருவீங்களே" - தெருப்புழுதி கூவினான் "ஆமா நேத்து நீங்க எங்க கூட டவுனுக்கு பொருட்காட்சி பாக்கல்ல வந்தீங்க..மறந்துடீங்களா உங்க கல்யாண தேதிய? "

Tuesday, March 3, 2009

திண்ணை - வீடு

"எல என்ன பெரிய கலெக்டர் உத்தியோகமா பாக்க? ஒழுங்கா நேரத்துக்கு வராண்டாமா? " - திண்ணைல உக்காந்திட்டே நம்ம மாடசாமி கிட்ட கடிந்துகொண்டேன். அவனுக்கு என்ன வெட்டி வேலையோ, ஒழுங்கா ஒம்போது மணிகெல்லாம் தினமும் வருவான், ஆனா இன்னிக்கி என்னன்னா மணி பத்து ஆச்சு வரும்போது. "இல்ல செட்டியாரே, வீட்ல ஆத்தா நிலைப்படிக்கு சிமண்டு போட சொல்லிச்சு..அதான் லேட்டாச்சு..." மாடசாமி சொன்னான். "சரி அத விடு, நம்ம சீனி ப்பயல எங்க காங்கல?". "அவன் எங்க யாவது ஊர் மேயப்போயிருப்பான் செட்டியாரே!" இன்னிக்கி திண்ணைல நானும் நீயும் தான் போல.
"சிமிண்டு வேல என்னமா விக்கி...கேக்கதுக்கு நாதி இல்ல!"- செட்டியார் ஆரம்பிச்சார்...எங்க உற்பத்தி பண்ற சிமிண்டேல்லாம் ஏற்றுமதி பண்ணிட்டா நமக்கு எங்க மலிவா கிடைக்கும்? ஒரு அங்கலாய்ப்பு. சீனாக்கு அப்புறம் நம்ம தான் உலகத்தில நிறைய சிமண்டு தயாரிக்கோம். ஆனா உள்ளூர விட வெளியூர்ல வித்தா நிறைய்ய லாபம். அதனால இங்க திண்டாட்டமா இருக்கு. இத யாரு கேக்கா? மொத மொதல்ல சிமண்ட கண்டுபிடிச்சது ரோமானியர்கள் தான். அவங்க தான் சுண்ணாம்பு கல்ல வச்சு வீடு கட்டுனது. மாடசாமி சும்மா செட்டியார் சொனதுக்கேல்லாம் உம் கொட்டிடுருந்தான்.
"இப்படித்தான் ஒரு குடியானவன் மேஸ்தரி இருந்தான். அவன் ஒரு பண்ணையார்ட்ட ரொம்ப வருஷமா வேல பாத்துட்டு இருந்தான். வயசோ ஆச்சு, வேலைல இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்தா என்னனுட்டு அவன் குடும்பத்தோட கலந்து ஆலோசித்தான். எல்லோர்க்கும் சரின்னு பட, பண்ணையார்ட்ட போய் தன்னோட முடிவ சொன்னான். பண்ணையாரும் சரினுட்டார். ஆனா போகறதுக்கு முன்னால எனக்கு ஒரு நல்ல வீடு கட்டி தரணும்னு சொன்னார். இவனும் வேண்டா வெறுப்பா ஒரு வீட்ட கட்டினான். முடிஞ்ச உடனே பண்ணையார் அந்த வீட்ட சாவிய இவன்கிட்ட கொடுத்து, அது அவனுக்காக தான் கட்டசொன்னதா சொன்னார். இவன் ஆச்சர்யப்பட்டு போய்ட்டான். அடடா இப்படி தெரிஞ்ச நமக்கு புடிச்ச மாதிரி கட்டி இருக்கலாமே, அவருக்கு புடிச்ச மாதிரி லா கட்டிடோம். இப்ப இதில்ல எப்படி வாழ்வதுன்னு யோசிச்சான். இப்படித்தான் நம்ம எல்லோரும் நம்ம வாழ்க்கைய நம்மக்கு புடிச்ச மாதிரி கரிசனத்தோட அமைக்காம , மத்தவங்க்ல பாத்து அமைகிறோம். ஆனா அது நமக்கு புடிக்கிறதில்ல . நம்ம உணரும் போது , அந்த காலம் கடந்து விடுகிறது"
செட்டியார் சொல்லிமுடிக்கிரதுக்குள்ள மாடசாமி தூங்கி விழுந்த்துட்டான். "ஏலேய், எழுந்திருடா பயலே!" செட்டியார் கத்தினார். மாடசாமி எழுந்து ஓடியே போனான்.

Monday, March 2, 2009

திண்ணை - ஒரு முதலாவது.


திண்ணை - நம்ம ஊர் கிராமங்கள்ல பெரும்பாலான வீடுகள்ல இருக்கும். வீட்டு வாசலுக்கும் வீதிக்கும் இடையில கூரை உள்ள ஒரு பகுதி தான் திண்ணை. அந்த காலத்ல எல்லோரையும் வீட்டுக்குள்ள விட்டுரமாட்டாங்க. சில பேரை வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணைல ஒகார வச்சி பேசி அனுப்புவாங்க. அது ஒரு வசதி. வெளியூர் காரா ஓய்வு எடுக்கவும் இது உதவும். பிரயாண களைப்பில அவங்க இரவு தூங்கி எழுந்து போவாங்க. அது ஒரு வசதி. இந்த திண்ணை கொஞ்சம் நீளமா இருந்தா, வீதில போற நாய், பூனை, பன்றி ஆகிய மிருகங்கள் வீட்டுக்குள்ள வராம இருக்கும். அது ஒரு வசதி. வயிற்று பசியோடு வர்றவங்களுக்கு சாப்பாடு போதவும் இது உதவும். இது தவிர வீட்டுக்குள்ள கொஞ்சம் புழுக்கமா இருந்தா சற்று திண்ணைல காத்தாட இளைப்பாறலாம்.


இப்படி பல விஷயங்கள மனசுல வச்சு தான் அந்த காலத்துல திண்ணை வச்சு வீட்டு கட்டுவாங்க.


ஆனா காலபோக்குல அந்த திண்ணை சும்மா வேல வெட்டி இல்லாம பொழுதை கழிக்கிற மக்களுக்கு ஒரு அரட்டை அரங்கமா மாறிடுச்சு... காலைல சாப்பிட்டு வந்து உக்காந்தா நம்ம நண்பர் குழாம் எங்கிருந்தாவது வந்துடவா. அரசியல்ல இருந்து சினிமா இருந்து, நம்ம மேலத்தெரு கமலாக்கா மவ ஓடிப்போன கதை வரைக்கும் பேசினா பொழுது போறதே தெரியாது. இடையிள்ள மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு கொஞ்சம் வெத்தலையும் கழி பாக்கும் அப்படியே கொஞ்சம் சுண்ணாம்பும் போட்டுட்டு அசந்தா... உண்டமயக்கம் தொண்டருக்கும் உண்டு சொல்றமாதிரி ஒரு தூக்கும் வரும் பாருங்க... எழுந்தா விளக்கு வைக்கிற நேரம் வந்திரும், வீட்ல ஆத்துகாரி தொணதொணக்க அரம்பிசுருவா!. சில நேரங்கள்ல மூணு சீட்டு, மங்காத்தா மற்றும் ஆடு புலி ஆட்டம் போன்ற உலக பிரசித்தி பெற்ற விளையாட்டெல்லாம் ஆடுவாங்க!. அப்பேற்பட்ட பெருமை நம்ம தின்னைகுண்டு.

அதனால தான் இந்த ப்ளாகுக்கு ஊர்வம்புனும், முதல் பகுதிக்கு தின்னைன்னு பேர்வச்சோம். இந்த திண்ணைல உக்காந்து ஊர்வம்ப்து பேசுறதுல தான் எத்தனை இன்பம்.